வில்சன் கொலை வழக்கு! தென்காசியைச் சேர்ந்த 5 பேர் கைது

Published:

kalikavalai - 2026

களியக்காவிளை சிறப்பு உதவிஆய்வாளர் வில்சன் படுகொலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைதானதாகக் கூறப் படுகிறது.

களியக்காவிளையில் கடந்த 8ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தென்காசியைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில், செய்யது ராஜா ஹரிம் நவாஸ், அல்ஹபிப் (பேட்டை), , அப்துல் காதர், முஹமது ஷாக்காரியா ஆகிய 5 பேர், 7 ( 1 ) (a)- CLA- ACT,உபா,16,18, 20, சிறப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்தாகவும், அவர்கள் பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

கேரள மாநிலம் ஆரியங்காவை அடுத்த தென்மலை அருகே உள்ள பாலருவியில் இரு மாநில போலீசார் கடந்த 13ஆம் தேதி மாலை இவர்களைக் கைது செய்து விசாரணை செய்து வந்துள்ளனர்.

terror related arrested - 2026

இதனிடையே, பயங்கரவாதிகளுக்கு, போலி ஆவணம் மூலம் சிம்கார்டு வாங்கிக் கொடுத்ததாக கைதான 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில், சிறையில் அடைக்கப்பட்டனர். பெங்களூரில் கடந்த 8 ஆம் தேதி முகமது அனீப்கான், இம்ரன் கான், முகம்மது சையது ஆகிய மூன்று பேரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.

பயங்கரவாதி காஜா மைதீன் மற்றும் கூட்டாளிகளுக்கு சிம்கார்டுகள் வாங்கிக் கொடுத்ததாகவும், போலி பாஸ்போர்ட் தயாரித்து காஜா மைதீன் தப்ப உதவியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டிய போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

இன்றுடன் காவல் முடிந்ததால் மூவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 3ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மூவரும் இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக, வில்சன் கொலை வழக்கு சமூக வலைத்தளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வெகு காலமாக திட்டமிட்டு, பயங்கரவாதிகள் நடமாட்டம் இருந்து வருவதாகவும், அதனை சமூகத்தினர், அரசியல் கட்சியினர், போலீஸார் என சிலர் கண்டும் காணாமலும் இருந்தனர், சிலர் ஊக்குவித்தனர் என்றும் குற்றம் சாட்டப் பட்டு வருகிறது.

kalikavalai 3 - 2026

இது குறித்து வாட்ஸ் அப் பில் வைரலான ஒரு பகிர்வு…

#தென்காசி_ஹனீபா 2006 ல் தென்காசி குமார் பாண்டியனை கொலை செய்த பின்‌ இசுலாமியர்கள் மத்தியில் அறியப்பட்டவன். இசுலாமியர்களுக்குள் நடக்கும் பிரச்சினையில் தலையிட்டு கட்ட பஞ்சாயத்து செய்து (காவல் நிலையம் உட்பட) காசு சம்பாதித்தவன்

அதன் பின் இசுலாமிய பயங்கரவாதிகளோடு தொடர்பு ஏற்பட்டு அத்வானி இரத யாத்திரையில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி! ஹிந்து அமைப்பின் தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய முக்கியமானவன் என காவல் துறையால் அடுத்த கைது

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

அடுத்தடுத்து ஜாமீனில் வெளி வந்து தேச நலனுக்கும், தென்காசி ஹிந்துக்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வந்தவன்! இவன் தென்காசி பகுதிக்கு வந்தாலே இவனுக்கு மேலப்பாளையத்தில் இருந்து இசுலாமிய பயங்கரவாதிகள் பாதுகாப்பு!

அந்த பகுதி இசுலாமிய இளைஞர்களிடத்தில் தேசத்திற்கு எதிராக, ஹிந்துக்களுக்கு கொம்பு சீவி விடும் வேலையை செய்து வருபவன். பல ஊர்களில் உள்ள இசுலாமிய இளைஞர்களை தேசத்திற்கு எதிராக சதி வேலைக்கு திருப்பி விட்டவன்.

உள்ளூர் இசுலாமியர்‌ மட்டுமல்ல காவல்துறை கூட‌ இவனை கண்டு அஞ்சும் நிலை, அந்தளவு பயங்கரவாதிகளோடு நெருக்கம் கடைசியாக களியாக்காவிளை‌ உதவி ஆய்வாளர் திரு வில்சன் அவர்களை சுட்டுக்கொன்ற இசுலாமிய பயங்கரவாதிகளோடு தொடர்பு என இவனின் பட்டியல் நீள்கிறது…

முழுக்க, முழுக்க தேசத்திற்கு எதிரானவனை இன்னும் எதற்காக தமிழக காவல்துறை விட்டு வைத்துள்ளது என தெரியவில்லை, இவனால் பாதிக்கப்பட்ட போவது அப்பாவி இசுலாமிய இளைஞர்களும், அவர்களின் குடும்பத்தாரும் தான்…. தமிழக அரசும், காவல்துறையும் கவனத்தில் கொள்ளுமா இவனை பற்றி.? என்று கேள்வி எழுப்பப் பட்டுவருகிறது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img