spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்கரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து!

கரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து!

- Advertisement -
thiruchencodu

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக மக்களை காக்கும் நோக்கில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஜூரஹரேஸ்வரர் கோயிலில் சிவனடியார்கள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபாடு நடத்தினர்.

திருஞானசம்பந்தர் 7-ம் நூற்றாண்டில் யாத்திரை சென்றபோதும், யாத்திரை முடிந்து திரும்பியபோதும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வழியாக சென்றுள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த இடம் திருச்செங்கோடு தேரடி தெருவில் உள்ளது. யாத்திரை முடிந்து திருஞானசம்பந்தர் திருச்செங்கோடு வந்தபோது மக்கள் கடுமையான குளிர் ஜூரத்தால் (காய்ச்சல்) பாதிக்கப்பட்டிருந்தனர். பலர் உயிரிழந்துள்ளனர்.

இதைக் கண்ட திருஞானசம்பந்தர் திருநீலகண்டம் என்ற ஒரு பதிகத்தை பாடி குளிர் ஜுரத்திலிருந்து மக்களை காத்ததாக வரலாறு உள்ளது. திருஞானசம்பந்தர் திருநீலகண்டம் பதிகம் பாடிய தளத்தில் ஜுரஹரேஸ்வரர் என்ற கோயிலை எழுப்பி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சிவபிரானது திருவடியைத் தொழுது குளிர் சுரத்தைப் போக்குமாறு அவ்வினைக்கிவ்னை என்று தொடங்கும் பதிகம் பாடினார்.

இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவில் தீண்டப் பெறா திருநீலகண்டம் என்று பாடப்பட்டுள்ளது. இதனால் இப்பதிகம் திருநீலகண்ட பதிகம் என்றழைக்கப்படுகிறது. இப்பதிகத்தினால் மக்களின் குளிர் சுரம் நீங்கியது.

இன்றும் இப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் சரியாகும். (இப்பதிகத்தின் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை.)

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம் 1

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்

பூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்

தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம் 2

முலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்

விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர்

இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்

சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் 3

விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்

புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே

கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்

திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் 4

மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர்

கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்

செற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம் 5

மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்

பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம் 6

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே

உருகிமலர் கொடுவந்துமை யேத்துதும் நாம் அடியோம்

செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே

திருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம் 8

நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து

தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்

தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்

சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம் 9

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்

பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்

தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் 10

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்

இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்

திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே 11

-திருஞானசம்பந்தர்

மக்களுக்கு விஷ காய்ச்சல் தாக்கும் போது இந்த கோயிலில் அபிஷேகம் செய்து மிளகு ரசம் சாதத்தை உண்டால் காய்ச்சல் நீங்கும் என்பது ஐதீகம். தற்போது சீன மக்கள் மட்டுமன்றி உலகை அச்சுறுத்துவதாக கரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்களை காக்கும் நோக்கில் திருச்செங்கோடு ஜுரஹரேஸ்வரர் கோயிலில் செங்குன்றம் தமிழ்ச்சங்கம் சார்பில் திருநீலகண்டம் பதிகம் பாடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

செங்குன்றம் தமிழ் சங்கத்தலைவர் பொன்.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தனியார் பள்ளி நிர்வாகி சிங்காரவேல் பதிகங்களை பாட தொடர்ந்து பக்தர்கள் திருநீலகண்டம் பதிகத்தைப் பாடி மனமுருக வேண்டினர்.

ஒரு பதிகம் என்பது 11 பாடல்களை கொண்டது. இந்த பதிகத்தில் 7-வது பாடல் கிடைக்கப் பெறாத நிலையில் 10 பாடல்களை பாடி வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்ந்து சுவாமி ஜுரஹரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு மிளகு ரசம் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திருச்செங்கோடு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe