90 களில், நடிகை சிம்ரனின் நடிப்பையும், அவருடைய நடனத்தையும் பார்த்து ரசிக்காத ரசிகர்களே இல்லை. விஜய், அஜித், விஜயகாந்த், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கடந்த வருடம் தான் நிறைவேறியது.
இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், தலைவர் செம்ம ஸ்டைலிஷாக நடித்திருந்த, ‘பேட்ட’ படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். இதே படத்தில் மற்றொரு நாயகியாக நடிகை திரிஷாவும் நடித்திருந்தார்.
நடிப்பில் மட்டும் இல்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தன்னை ரசிகர்களுக்கு நினைவூட்ட துவங்கியுள்ளார் சிம்ரன்.
அந்த வகையில், கடந்த வாரம், டிக் டாக் செயலியில் தானும் இணைந்துள்ளதாக கூறி, தன்னுடைய மகன்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து இவர் புதிதாக யூ டியூப் ஒன்றையும் துவங்கியுள்ளார். சிம்ரன் அண்ட் சான்ஸ் பிலிம் என்ற பெயரில் ஆரம்பித்துள்ள இதில், சிம்ரன் அவர் சம்மந்தமான சில வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் காதலர் தினத்தன்று, ஹிந்தி மொழியில் உருவாகியுள்ள அழகிய காதல் பாடலுக்கு நடனம் ஆடி, அதனை அவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட, ஒரே நாளில் லட்ச கணக்கான ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த வீடியோ இரண்டு நாட்களை ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு நடிகை சிம்ரனும் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பாடலில் மீண்டும் தன்னுடைய இடையழகை அசைத்து இவர் நடனமாடியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தொடர்ந்து சிம்ரன் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். இந்நிலையில் அவரின் டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சிம்ரனுக்கு என்ன ஆனது என்று பதறியுள்ளனர். சிம்ரனுக்கு என்ன ஆனதோ என்று பதறி போய் கேட்க காரணம் என்னவென்றால் அடிப்பட்டு ரத்தம் வழிய அவர் பதிவிட்டுள்ள புகைப்படமே. ஆனால், அது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சி அது என்று தெரிய வந்துள்ளது.