பிப்.19: இன்று சத்ரபதி சிவாஜி ஜெயந்தி!

இந்தியா கட்டுரைகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
shivaji ramadoss - 2026

மராட்டிய சக்ரவர்த்தி சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாள் இன்று மஹாராஷ்டிராவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சிவ ஜெயந்தி என்றும் சிவாஜி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

1630 பிப்ரவரி 19 ல் முகலாயர் ஆட்சி காலத்தில் புணே மாவட்டம் ஷிவ்ரேனி மலைக்கோட்டையில் ஷாஹாஜி போன்ஸ்லே, ஜீஜாபாயி தம்பதிகளுக்கு சிவாஜி பிறந்தார்.

shivaji maharaj1 - 2026

1674 ஜூன்6ல் அரியணை ஏறினார். தாயிடம் மிக அன்பாக இருந்த சிவாஜி பக்தியோடு ராமாயண மகாபாரதங்களை படித்தறிந்தார். 1680 ஏப்ரல் 3 அன்று 52வது வயதில் இயற்கை எய்தினார் .

சிவாஜி பிறந்தநாளை சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா பூலே முதன்முதலில் கொண்டாடத் தொடங்கினர். அப்போது முதல் சிவாஜி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

இருமுறை பாபாசாகேப் அம்பேத்கர் சிவாஜி ஜெயந்தி உற்சவங்களுக்கு தலைமை வகித்துள்ளார். சிவாஜி பிறந்த நாளன்று மகாராஷ்டிராவின் அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களிலும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

shivaji maharaj - 2026

இது மராட்டிய மக்களின் பெருமைமிக்க தினமாக கருதப்படுகிறது. மகாராஷ்டிரா மட்டுமின்றி சிவாஜி ஜெயந்தி கோவா, கர்நாடகாவிலும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

சிவாஜியின் சீரிய கருத்துக்களை சமுதாயத்தில் ஒவ்வொரும் கடைப்பிடிக்கும்படி செய்வதில் சிவாஜி ஜெயந்தி கொண்டாட்டங்கள் வெற்றி பெறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.