802812 shoo - 2026

ஷூ வில் 7 அடி நீள நாகபாம்பு ..

சற்றுமுன்
802812 shoo - 2026

கர்நாடகாவில் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் ஷூ வில் 7 அடி நீள நாகபாம்பு ஒளிந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநில சிவமொக்கா நகரை யொட்டிய பொம்மனகட்டே பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இதற்காக ஷூ ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நடைபயிற்சி முடிந்தவுடன் விட்டு சென்ற ஷூவில் 7 அடி நீள நாக பாம்பு ஒளிந்து இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் கொடி வீரர் கிரணுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த கிரண் ஷு வில் ஒளிந்திருந்த பாம்பை பிடித்து எடுத்துச் சென்றார். பின்னர் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.