images 24 - 2026

நேரு உள்விளையாட்டு மைதானத்தில் போலிஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

சென்னை

சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த காவலரின் உடலை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

images 24 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.