Fa3bY9MaIAEeb X.jpeg 1 - 2026

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில்   ‘இந்தியன் 2’ இன்று பூஜையுடன் துவக்கம்..

சற்றுமுன்
Fa3bY9MaIAEeb X.jpeg 1 - 2026

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில்   ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டு இன்று பூஜையுடன் துவங்கி நடைபெற்றது

இன்று அதிகாலை இப்படத்தின் புதிய தோற்றப் போஸ்டரைப் ’ஹி இஸ் பேக்’ என்கிற வசனத்துடன் படக்குழுவினர் வெளியிட்டனர்.  தற்போது பூஜையுடன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்தியன் 2’ திரைப்படத்தின் புதிய தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நிற்கிறது. தயாரிப்பு தரப்பு மற்றும் நடிகர்கள் பிரச்னையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

Fa5 1mgaQAIqPsQ - 2026

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.400 கோடி வசூலைத் தாண்டியதால் தற்போது  ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்துக்காக அமெரிக்காவில் ஒப்பனைக் கலைஞர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தோற்றப் போஸ்டரைப் ’ஹி இஸ் பேக்’என்கிற வசனத்துடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தியன் தாத்தா கதாபாத்திரமான சேனாதிபதியின் தோற்றத்தை மீண்டும் நினைவுபடுத்தும்படியாக இருக்கிறது புதிய போஸ்டர் என பலரும் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்றப் இப்பூஜையில் இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், நடிகர் பாபி சின்ஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டர். கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை. மேலும், அவர் இல்லாத காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Fa5 4LSaMAAUuvv - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.