
மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே வியாழக்கிழமை இரவு துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடையின் மூன்று மாடிகளிலிலும், தீ மளமளவென்று பரவியது. மதுரையில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயில் பல லட்சம் பெருமான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
மதுரை மீனாட்சி கோயில் அம்மன் சன்னதி எதிர்ப்புறம் உள்ள ஜவுளிக்கடையில் இடி விழுந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள அம்மன் சன்னதியில் உள்ள மூன்று மாடி ஜவுளிக் கடையில் இடி விழுந்து தீ பிடித்ததில் 3 மாடியில் இருந்த கோடிக்கணக்கான மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து கொண்டிருக்கின்றன.

இவற்றை மதுரை தீயணைப்பு படைவீரர்கள் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அணைத்து வருகின்றனர். இரவு சுமார் 8 மணி அளவில் இடி விழுந்ததில், பிடித்த தீ தற்போது வரை எரிந்து கொண்டிருக்கிறது. இவற்றை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை 4 மணியிலிருந்து மதுரை நகர் முழுவதும், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் இரவு 8 மணி அளவில் அம்மன் சன்னதியில் உள்ள இந்த மூன்று மாடிக் கட்டடத்தில் இடி விழுந்ததில் கட்டடம் இடிந்தது உடன் தீப்பற்றி எரிந்தது.
இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான ஜவுளி எரிந்து சேதமடைந்தது. மேலும் அருகில் உள்ள கடைகளிலும் தீப்பற்றி உள்ளதால், மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட |தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து வருகின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை