அடத் தூ…. வெறும் 1 நிமிட டிரைலரில் எவ்ளவு வன்மம்?!

உரத்த சிந்தனை புகார் பெட்டி
godman
godman

Zee 5 இல் வந்த அந்த சர்ச்சைக்குரிய Godman வெப் சீரிஸ் குறித்து யார், யார் கிட்ட லாம் பேசணுமோ எல்லார் கிட்டயும் என் அப்பா பேசியாச்சு. இந்நேரத்துக்கு அந்த டிரைலரே டெலிட் ஆகி இருக்கும் இல்லை என்றால் இன்னும் சில நிமிடங்களில் டெலிட் ஆகி விடும்.

Zee தமிழில் வெறுமன ஆன்மீகம், ஜோதிடம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை என் தந்தை (ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்) செய்கிறார் அதோடு சரி.

எங்கள் ஆஃபீஸ்க்கு இன்று சில போன் கால்கள் வந்தது. என்னமோ என் அப்பா தான் அந்த வெப் சீரிஸ் க்கு பர்மிஷன் கொடுத்த மாதிரி சில பிரகஸ்பதிகள் பேசினார்கள். அதுபோல் பேசியவர்களின் அறியாமையை நினைத்து எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் திடீர் என்று ஹிந்துக்களிடையே ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சியை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

பிராமணன் தான் வேதம் படிக்கணும் னு எந்த? சாஸ்திரத்தில் சொல்லி இருக்கு.

இந்த வசனம் தவறே இல்லை. இதைலாம் அன்றே விவேகானந்தர் போன்ற பல ஞானிகள் பேசிவிட்டார்கள்.

ஆனால் எல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் என்று சொல்வது அப்புறம் வாயில் பீடி வைத்து கோவில் விளக்கில் அதை பற்ற வைப்பது, இன்னும் அருவெறுக்கத்தக்க சில காட்சிகள்

அடத்தூ…. வெறும் 1 நிமிட டிரைலரில் எவ்ளவு வன்மம்.

முதல் விஷயம் பிராமண சமுதாயம் என்று அல்ல எந்த ஒரு சமுதாயத்தையும் இதுபோல் கேவலமாக காட்டுவது தவறு.

இரண்டாவது விஷயம் கோவில் கர்ப்ப கிரகத்தில் பீடியை பற்ற வைப்பது போன்ற அந்த காட்சி ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும், ஹிந்து நம்பிக்கையையும் கேவலப்படுத்தும் நிகழ்வு.

மூன்றாவது விஷயம் உடனே காஞ்சிபுரம் தேவநாதன் ன்னு சிலர் வரலாம். அந்த தேவநாதன் போன்ற சில போலி அர்ச்சகர்கள் முதல் போலி சாமியார்கள் வரை பலரை தோலுரிக்கும் பல நூறு படங்கள் தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் வந்திருக்கு. அதே சமயம் நம் தமிழ்நாட்டில் டாவின்சி கோட் படம் ஏன்? தடை செய்யப்பட்டது.

எவ்ளவோ பாதிரிகள் பாலியல் சர்ச்சையில் மாட்டி இருக்கிறார்களே அதுகுறித்து இதுபோல் ஒரு வெப் சீரிஸ் அல்லது திரைப்படம் எடுக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கா? கேரள பிஷப்பின் லீலையை இதுபோல் அடுத்து வெப் சீரிஸாக எடுக்க நீங்கள் தயாரா என்று நேற்று இளங்கோவிடம் முகநூலில் கேட்டேன். அந்த இளங்கோ உடனே என்னை பிளாக் செய்து விட்டார்.

திக, திமுக அனுதாபியான அந்த இளங்கோ இனிமேல் இன்பநிதியின் டிக்கி துடைக்கும் வேலையை மட்டும் ஒழுங்காக செய்தால் அது நல்லது.

சார்ந்தோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • ஹெச். வி. கிருஷ்ணபிரசாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.