
சிவகாசி : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன.
பட்டாசு கடைகள் தவிர்த்து, அனுமதியில்லாமல் வீடுகள், குடோன்களை வாடகைக்கு பிடித்து சட்ட விரோதமாக பட்டாசுகளை பெட்டி, பெட்டியாக இருப்பு வைத்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் பாறைப்பட்டி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சாமிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (58). என்பவர், ஒரு குடோனில் உரிய அனுமதி எதுவும் பெறாமல் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 பெட்டி பட்டாசுகள் பதுக்கி வைந்திருந்தது தெரிய வந்தது.
பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், லட்சுமணன் மீது வழக்குப்
பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Posts by ரவிச்சந்திரன், மதுரை:
- நகைக்கொள்ளை; மீனாட்சிக்கு தொடர்பில்லை: அடித்துச் சொல்லும் நிஷாந்த்!
- திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா; அன்ன வாகனத்தில் சுப்ரமண்யர் வீதி உலா!
- மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா; திருக்கல்யாண வைபவம்!
- கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்!
- மதுரை நகைக்கடை கொள்ளை; நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்!


