images 79 - 2026

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் ..

சற்றுமுன்

 தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைக்கான காரணமாக தமிழகத்தில் மேற்பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்தில் இயல்பைவிட அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் தென்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், 23 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் தமிழகத்தில் மழை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் 2 மாவட்டங்களில் 17செ.மீ மழை பதிவாகியுள்ளது. எனவே, தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

images 79 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.