945015 meet - 2026

தமிழகத்தில் இந்தி எதிர்த்து ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம்-அண்ணாமலை..

சற்றுமுன்
945015 meet - 2026

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழக அரசு தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:- இரட்டை வேடம் தி.மு.க. தமிழ்மொழியை வளர்க்கவில்லை, அழித்து கொண்டிருக்கிறது என்று எங்கேயும் போராட்டம் நடந்ததாக சரித்திரம் கிடையாது. முதன்முதலாக இந்த போராட்டத்தை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மக்களுக்கு தி.மு.க.வின் சதி திட்டத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். தி.மு.க.வின் இரட்டை வேடத்தை கோடிட்டு காட்டுவதற்காகதான் இந்த போராட்டம். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் 48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதுவரை இத்தனை பேர் தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. தமிழகத்தில் 2 லட்சம் என்ஜினீயரிங் சீட் உள்ளது. அதில் தமிழ்மொழியில் படிப்பதற்காக 1,377 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 50 மாணவர்கள் மட்டுமே சேர்ந்து உள்ளனர். தமிழ் மொழி மெல்லமெல்ல அழிந்து வருகிறது.

அடுத்த போராட்டம் இந்தியை யாரும் திணிக்கவில்லை. இந்தி திணிப்பு என்ற வார்த்தையின் மூலமாக ஆங்கிலத்தை திணிப்பதுதான் தி.மு.க.வின் எண்ண ஓட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளிலும் 3-வது மொழி இந்திதான். இதை மறுக்க முடியுமா? மறுபடியும் இந்தி எதிர்ப்பு என்று ஆங்கிலத்தை புகுத்தினால் அடுத்த போராட்டம் மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து, அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் அளவில் இருக்கும்.

தற்கொலை படை தாக்குதல் தமிழக வரலாற்றில் கோவையில் நடந்தது, முதல் தற்கொலை படை தாக்குதல். 13 பேர் திட்டம் போட்டு 75 கிலோ வெடி மருந்துகளை வாங்கி சேமித்து, அதை காரில் கொண்டு சென்றபோது. வெடித்துள்ளது. இதுதான் உண்மை. தற்கொலை படை தாக்குதலை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவது வெட்கக்கேடானது. அரசியல் களம் மாறி விட்டது. தி.மு.க.வின் மத, சாதி அரசியல் எடுபடாது. ஊக்கத்தொகை அம்பேத்கர் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் திருமாவளவன் எம்.பி.. அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரசோடு கூட்டணி வைத்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. கலங்கரை விளக்கு நம் கண்ணுக்கு தெரிகிறது. அதை நோக்கி, படகில் மாலுமிகளாக நாம் செல்ல வேண்டும். அலைகளை தாண்டி சென்றால் தான் மக்களின் நம்பிக்கை கிடைக்கும். தமிழகத்தில் அனைத்து மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மூலமாக படிக்க வழிவகை செயய வேண்டும். அதற்காக குழு அமைக்க வேண்டும். தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2500 ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார். முன்னதாக பா.ஜ.க. ஆர்ப்பாட்ட மேடையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.