
யாராவது தான் அமர்ந்த மரத்தை தானே வெட்டுவார்களா? வைரல் வீடியோ.
யாராவது தனக்குத்தானே அபாயம் விளையும் படியாக உட்கார்ந்திருக்கும் மரத்தை வெட்டும் முட்டாள்கள் இருப்பார்களா?
இன்டர்நெட்டில் வைரலாக சுற்றும் ஒரு வீடியோ கூட இந்த கூற்றினையே நிரூபித்து வருகிறது.
இதிலுள்ள மனிதர் கீழே விழாமல் மரத்தின் மேல் பகுதியை பிடித்துக்கொண்டு ஊஞ்சல் ஆடுகிறார். அவர் மரத்தின் மேல் ஏறி மரத்தின் தலையை வெட்டிய முறை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அச்சத்தையும் விளைவிக்கிறது.
அமெரிக்காவின் முன்னாள் புட்பால் வீரர் ரிக்ஸ் சாப்மேன் இந்த வீடியோவை ஷேர் செய்து உயரமான பனைமரத்தை ரம்பத்தை கொண்டு அறுப்பதை எப்போதாவது யாராவது பார்த்தீர்களா என்று விமர்சனம் செய்துள்ளார் .
அதில் ஒரு மனிதர் மிக மிக உயரமாக உள்ள ஒரு பனை மரத்தின் மீது ஏறி அதன் தலைப்பாகத்தை ரம்பத்தால் அறுத்து வெட்டுவது தெரிகிறது. அவர் அதன் நுனியில் அமர்ந்து இருப்பதால் அந்த மரம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடுகிறது. இலைகளோடு கனமாக இருந்த தலைப்பகுதி வெட்டப் பெட்டுவிட்டதால் வெறும் மொட்டை மரம் வேகமாக பின்னாலும் முன்னாலுமாக ஆடியதால் அவர் எங்கே கீழே விழுந்து விடுவாரோ என்று நமக்கு அச்சம் ஏற்படுகிறது. ஆனால் அவர் பாதுகாப்பாகவே அதன் மீது அமர்ந்து இருந்தார்.
அனைவரையும் ஆச்சரியத்துக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கிய அந்த வீடியோவை நெட்டிசன்கள் மிக அதிகம் லைக் செய்து விமர்சனம் செய்துள்ளார்கள்.
யாராவது இந்த மனிதர் மரத்தின் மீது இருந்து பறந்து விடுவார் என்று நினைத்தால் அவர்கள் கையை த் தூக்குங்கள் என்று ஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.
மரத்தின் அடிப்பாகத்தை வெட்டலாம் அல்லவா என்று சிலர் கேட்க அத்தனை உயரமான மரத்தை வெட்டினால் ஒரேடியாக கீழே விழுந்து மின்சார ஒயர்கள், வீடுகள் அடிபடும் என்று மேலும் சிலர் விளக்கம் அளித்துள்ளார்கள். ஓ மை காட்!