மோடியின் கோட் சூட் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலம்: கடைசி நேரத்தில் வாங்கிய குஜராத் வைர வியாபாரி

இந்தியா

modi-suit-auction சூரத்: பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் சூட் ரூ.4 கோடியே 31 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனை குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி லால்ஜி பாய் பட்டேல் வாங்கியுள்ளார். இதனுடன், பிரதமருக்கு கடந்த 9 மாதங்களில் கிடைத்த பரிசுப் பொருட்களையும் சேர்த்து ஏலமிடும் 3 நாள் நிகழ்ச்சி இன்று நிறைவு பெற்றது. இன்று நடந்த 3 ஆம் நாள் ஏலத்திலும் மோடியின் ‘சூட்’டை ஏலத்தில் எடுக்க அதிக போட்டி காணப்பட்டது. சூரத்தை சேர்ந்த ராஜேஷ் மகேஸ்வரி என்பவர், ரூ.1.25 கோடிக்கு ஏலம் கேட்டார். தொடர்ந்து குஜராத்தின் பவநகரைச் சேர்ந்த தொழிலதிபரும், வைர வியாபாரியுமான கோமல்காந்த் சர்மா ரூ.1.41 கோடிக்கு ஏலத்தில் கேட்டார். தொடர்ந்து இன்று காலை நடந்த ஏலத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியபாரி லால்ஜி பாய் பட்டேல் ரூ.4 கோடியே 31 லட்சம் கொடுத்து வாங்கினார். இந்த ஏல நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகை முழுவதும், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடப்படும் என்று சூரத் மாநகராட்சி அதிகாரி கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.