images 39 1 - 2026

பா.ஜ.க தலைவர் பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி..

அரசியல் நெல்லை
images 39 1 - 2026

வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது அவரது சொந்த கருத்து என்று பா.ஜ.க மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் பா.ஜ.க மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு நான் எந்தவித விளக்கமும் சொல்ல முடியாது.

அதிமுக.,வாக இருந்தாலும், திமுக.,வாக இருந்தாலும், காங்கிரசாக, பா.ஜ.க வாக இருந்தாலும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்தித்துள்ளனர். இது கடந்த கால வரலாறு. தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.க வின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.