December 8, 2025, 2:44 PM
28.2 C
Chennai

திருச்சி- இன்று லாரி -ஆம்னி வேன் மோதிக்கொண்ட விபத்தில் காரில் சென்ற 6 பேர் பலி..

FB IMG 1679190297805 - 2025

திருச்சி அருகே திருவாசி என்ற இடத்தில் லோடு லாரியும், இன்று ஆம்னி வேனும் எதிரெதிரே கடுமையாக மோதிக்கொண்ட விபத்தில் காரில் கும்பகோணம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த குழந்தை உள்பட 6 பேர் அதே இடத்தில் பலியானார்கள். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கும்பகோணத்திற்கு செல்வதற்காக திருச்சி வழியாக ஆம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்தார்கள். இதேபோல், மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி ஒரு லாரி சென்றது.  அந்த ஆம்னி வேன், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி என்ற இடத்திற்கு இன்று அதிகாலை 3.50 மணிக்கு வந்தபோது லோடு ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் கடுமையாக மோதிக்கொண்டன.

images 40 1 - 2025

இந்த விபத்தில் ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று அதிகாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இதில் அந்த ஆம்னி வேன் அப்பளம்போல் நொருங்கியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வாய்த்தலை போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மேலும் 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விபத்து நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தார். இந்த விபத்தினால், திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் ஒரு மண நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை என்பதால் வாகன நெரிசல் குறைவாக இருந்தபோதும் பயணிகள் தாமடைந்தனர்.

போலீசார் விரைந்து அந்த போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை நேரம் என்பதால், டிரைவர்கள் யாராவது ஒருவர் தூங்கியிருக்கலாம்.

அதனால் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 

மேலும் இதுபோல் சாலைகளில் அதிகாலை விபத்துக்களை தடுக்க ஆங்காங்கே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் – திருச்சி சாலை குறுகலான ஒரு சாலையாக உள்ளது. அந்தச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் அல்லது சாலையில் ஆங்காங்கே விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த சாலையில் அடிக்கடி இதுபோன்ற விபத்து ஏராளமாக ஏற்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற அதிகாலை விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஒரே கடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உள்பட 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories