images 66 - 2026

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 சரிவு..

சற்றுமுன்
images 66 - 2026

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.43,760-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து 44 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்தது.

இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,080 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.74,000-ஆக இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.