karthigai pooram andal darshan at nandavanam - 2026

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
karthigai pooram andal darshan at nandavanam - 2026

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழா முக்கியமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கொண்டாடப்படும் ஒரு வைணவப் பெருவிழா. இது கார்த்திகை மாதத்தில் வரும் பூர நட்சத்திர தினத்தில் நடைபெற்று, சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற நிகழ்வுகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆண்டாளின் திருநட்சத்திரமான இந்த நாளில், பக்தர்கள் தரிசனம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து, ஆண்டாளை வழிபடுவார்கள்.

இது ஆண்டாள் நாச்சியாரின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை கார்த்திகை பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் பிறந்த இடமான நந்த வனத்திற்கு வருகைதந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திரளான‌ பக்தர்கள் கலந்து கொண்டு பாசுரங்கள் பாடி வழிபாடு நடத்தினர் .

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் தனுர் மாத மார்கழி மாத பிறப்பு 16.12.25 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது . அன்று காலை 10.00 மணிக்கு மார்கழி மாத பிறப்பு நேரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் குறடு மண்பத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.