#சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது – உச்ச நீதிமன்றம்
#SupremeCourt | #SabarimalaCase | #SabarimalaTempleCase
*சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்’ – உச்சநீதிமன்றம்…
”மற்ற மத தலைவர்களின் உதவியுடன் சீராய்வு மனு தாக்கல்” – சபரிமலை தேவஸ்தானம்
சபரிமலைக்குள அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதி மல்ஹோத்ராவை தவிர 4 நீதிபதிகள் ஒருமித்து இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.
தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர், நரிமன் ஆகிய நீதிபதிகளைத் தவிர நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
சபரிமலையில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. உடல் மற்றும் உளவியல் ரீதியை காரணம் காட்டி பெண்களின் உரிமையை பறிக்கக்கூடாது.
ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்துக் கள். இதில் பாகுபாடு கூடாது. தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் கூடாது.
வழிபாடு என்பது ஆண் – பெண் இருவருக்கும் சமமானது என்று கூறி 10 வயது முதல் 50 வயது வரை யிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை.
இந்நிலையில், வயது வித்தியாசமின்றி 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களையும் அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. ‘சபரிமலையில் ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களால் 48 நாட்கள் விரதமிருக்க முடியாது என்பதால், அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவல்லை’ என தேவசம் போர்டு வழக்கறிஞர் வாதிட்டார்.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக, ”மற்ற மத தலைவர்களின் உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்” என்று திருவாங்கூர் தேவஸம் போர்ட் தலைவர் பத்மகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.





There is absolutely NO JOY over the judgement delivered by SC on the entry of women. Firstly there was a very long standing practice followed by the temple after considering various aspects bothering women. This has been made foolish by SC. Secondly, the point totally thorown out was the mensuration issue. In no religious place the women in Mensuration period are allowed to participate due to the health, unhygene condition of the body which in many cases emit very bad ordour. The women themselves avoid mixing with males during this period. They are supposed to take perfect rest in these times and going to Sabarimala is a very high strain exercise and might result in high hemorage as the woman needs admission in a hospital. This can be fatal aswell. The judges must be held responsible for such cases as they have not shown respect to the Indian women stamina.