புதுதில்லி: கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
சபரிமலை ஐப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என்று அவர் கூறியுள்ளார்.




