சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று மு.க.ஸ்டாலின் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று தெரிவித்த அவர் , சமூக நீதி – பாலின சமத்துவம் – பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல் என்று தெரிவித்துள்ளார்..
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு: கமல்ஹாசன்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரதிபலித்துள்ளது: குஷ்பு
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: சுப்பிரமணிய சுவாமி ட்வீட்
உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்; இந்திய நீதித்துறையில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு – விசிகவின் ரவிக்குமார்





Your demi God has already preached that there was no difference between mother, wife, daughter and sister. So for you and your followers this judgement will be a welcome sign.