tn secretariat - 2026

கருவூல கணக்குத் துறையில் பெரும் முறைகேடு; ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

புகார் பெட்டி சென்னை பொது தகவல்கள்
tn secretariat - 2026
#image_title

கருவூல கணக்குத் துறையில் கடந்த 2021 முதல் 2026 இன்று வரை CPS Missing credit எனப்படும் விடுபட்ட பங்களிப்பு ஓய்வூதிய பிடித்த தொகை ஒவ்வொரு மாதமும் அரசு பணியாளர்களின் சம்பளம் மற்றும் நிலுவை சம்பளங்களில் இருந்து IFHRMS வழியாக பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்பொழுது சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் சி பி எஸ் இல் பிடிக்கப்பட்ட தொகை IFHRMS சர்வரில் காணாமல் போய் உள்ளது. இதை, கருவூல கணக்குத் துறையின் GDC அலுவலகத்தில் உள்ள பெண் அதிகாரி மற்றும் IFHRMS திட்டத்தில் உள்ள அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக மறைத்துள்ளனர்.

தற்பொழுது தமிழக அரசால் TAPS ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட உள்ளதால் பழைய திட்டத்தில் உள்ள இந்தக் குளறுபடிகளை அவசரகதியில் தனது துறை பணியாளர்களை வைத்து இரவு பகல் பாராமல் மற்ற அனைத்து துறைகளில் உள்ள பணியாளர்களை நிர்பந்தித்து பதிவேற்றம் செய்கின்றனர். இதன் காரணமாக பல ஆயிரக் கணக்கான தவறான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. மேலும் IFHRMS வழியாக 2021 முதல் தற்பொழுது 2026 வரை அனைத்து அரசு பணியாளர்களின் CPS பிடித்தங்கள் காணாமல் போய் உள்ளது.

GDC பெண் அதிகாரி – தனது பெயரை காப்பாற்றிக் கொள்ளவும் அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து நற்பெயர் பெறவும் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளையும் பணியாளர்களையும் பிற துறை பணியாளர்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் விதத்தில் அசிங்கமான வார்த்தைகளால் பேசியும் திட்டியும் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்.

ஆனால் IFHRMS மென்பொருளில் உள்ள இவ்வளவு பெரிய குறைகளைக் களைய பட்டைய கணக்காளர்கள் என்று தங்களை பெருமையாக கூறிக்கொள்ளும் கருவூலத்துறையில் எந்த ஓர் அரசு அதிகாரியும் முன்வரவில்லை.

மேலும் IFHRMS மென்பொருளில் பட்டியல்களில் உள்ள சிறிய குறைகளைக் களைய டிக்கெட் எனும் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் விப்ரோ பணியாளர்கள் இதை சாதமாகப் பயன்படுத்தி எங்களிடமிருந்து லஞ்சம் பெற்று சரி செய்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தங்களை பெரிய அறிவாளிகளாக நினைத்துக் கொள்ளும் கருவூலக் கணக்குத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் IFHRMS மென்பொருளில் ஏதாவது ஒரு மாற்றம் அல்லது குளறுபடிகள் அல்லது குழப்பங்களை ஏற்படுத்தி சாதாரண பணியாளர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்த இயலாத நிலையில் உருவாக்கி வைத்துள்ளனர். இது பல பண முறைகேடுகள் நடைபெற வழிவகுக்கும்.

இதை கருவூல கணக்குத் துறை ஆணையர் கவனித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.