icc t20 worldcup - 2026

T20 WC 2026: மூன்றாவது நாளில் முத்தாய்ப்பான ஆட்டம்!

விளையாட்டு இந்தியா சற்றுமுன்
icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி மூன்றாம் நாள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இன்று (09.02.2026) முதல் ஆட்டத்தில் கொல்கொத்தா, ஈடங்கார்டன்ஸ் மைதானத்தில் காலை 1100 மணிக்கு இத்தாலி ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் ஓமன், ஜிம்பாபே அணிகள் மதியம் 0300 மணிக்கு கொழும்புவில் மோதுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில், அகமதாபாத்தில் கனடா, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

200க்கும் அதிகமான ஸ்கோர் அடித்த ஸ்காட்லாந்து அணி

          பூவாதலையா வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி முதலில் மட்டையாடவந்தது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 207 ரன் எடுத்தது. அந்த அணியின் ஜியார்ஜ் முன்சே (84 ரன்), மைக்கேல் ஜோன்ஸ் (37 ரன்), ப்ராண்டன் மெக்முல்லன் (41 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் பென் மெனேண்டி (52 ரன்), ஹாரி மெனேண்டி (37 ரன்), ஜே ஜே ஸ்மட்ஸ் (22 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இருப்பினும் ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தோல்வியுற்றனர். ஸ்காட்லாந்து அணி இந்த உலகக் கோப்பையின் அதிக பட்ச டீம் ஸ்கோரான 207 ரன் எடுத்து சாதனை புரிந்தது.

ஜிம்பாபே அபார வெற்றி

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

          இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் மதியம் 0300 மணிக்குத் தொடங்கியது. பூவாதலையா வென்ற ஜிம்பாபே அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் ஓமன் அணி மட்டையாட வந்தது. ஓமன் அணியில் மூன்று பேட்டரிகள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். சூஃபியான் மகமூது (25 ரன்), வினாயக் ஷுக்லா (28 ரன்), நதீம் கான் (20 ரன்) ஆகியோர் அந்த மூன்று பேட்டர்கள். ஜிம்பாபே அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ரிச்சர்ட் நகரவா மற்றும் முசராபானி இருவரும் தலா நாலு விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய ஜிம்பாபே அணி 13.3 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 106 ரன் எடுத்து அபாரவெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா கனடா அணியை அடித்து நொறுக்கியது

          மூன்றாவது ஆட்டம் அகமதாபாத்தில் மாலை 0700 மணிக்குத் தொடங்கியது. பூவாதலையா வென்ற கனடா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாட வந்தது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு அந்த அணி 213 ரன் எடுத்தது. இதனால் காலையில் ஸ்காட்லாந்து அணி செய்த சாதனையை முறியடித்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

தென் ஆப்பிரிக்க அணியின் ஐய்டன் மர்க்ரம் (59 ரன்), க்விண்டன் டி காக் (25), ரிக்கில்டன் (33 ரன்), டேவிட் மில்லர் (39 ரன்), ஸ்டப்ஸ் (34 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர்.  இரண்டாவதாக ஆடிய கனடா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் நவனீத் டலிவால் (64 ரன்), ஹர்ஷ் தாக்கர் (33 ரன்) சிறப்பாக ஆடினர். மற்றவர்கள் இன்று ஜொலிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கவின் லுங்கி நிகிடி 4 விக்கட்டுகளும், மார்கோ யான்சென் 2 விக்கட்டுகளையும் எடுத்தனர். இவ்வாறு தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வென்றது.

நாளை (10.02.2026) முதல் ஆட்டம் டெல்லியில் காலை 1100 மணிக்கு நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் மாலை 0300 மணிக்கு சென்னையில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. மூன்றாவது ஆட்டம் மாலை 0700 மணிக்கு பாகிஸ்தான் அமெரிக்க அணிகளுக்கிடையே நடைபெறும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.