தமிழகத்தில் விரைவில் செவிலியர் சீருடை மாற்றப்படும் இதற்கு முதல்வரும் அனுமதி வழங்கியுள்ளார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., உமாமகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்படும் என அவர் கூறினார்.
குட்கா ஊழல் விவகாரத்தில், மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை சுதந்திரமாக விற்க அனுமதி தந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை விஜயபாஸ்கர் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



