கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக, பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், காவிரி விவகாரம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன், காவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலுக்காக கால அவகாசம் கேட்டோம், இத்தகைய அரசியலை அனைத்துக் கட்சிகளும் செய்கின்றன என தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றார்.
சமீபத்தில் வெளியான கர்நாடகா தேர்தல் முடிவு குறித்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



