england vs india t20 - 2026

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

விளையாட்டு உலகம் சற்றுமுன்
england vs india t20 - 2026

இந்திய அணி மிக மோசமான தோல்வி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இங்கிலாந்து 20 ஓவர்களில் 201/7 (பில் சால்ட் 70, பட்லர் 36, சாம் கரன் 41, ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கட்) இந்திய அணி 11.4 ஓவர்களில் 76க்கு ஆல் அவுட் (ஜோஷ் டாங் 4/28, ஆர்ச்சர் 3/29)

          பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாடவந்த இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் பில் சால்ட் (70 ரன்), ஜாஸ் பட்லர் (36) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். பின்னர் ஹர்ஷித் ராணா மற்றும் பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் சில விக்கட்டுகள் வீழ்ந்தன. இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் இன்று சிறப்பாகப் பந்துவீசவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது.

          இதன் பின்னர் இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணியின் தொடக்கவீரர்கள் அபிஷேக் ஷர்மா (10 ரன்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (13 ரன்) தங்களுடைய சிக்சர்கள் மூலம் விறுவிறுப்பாக ரன் சேர்த்தனர். ஆனால் இரண்டாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா, மூன்றாவது ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி, நாலாவது ஓவரில் இஷான் கிஷன், ஐந்தாவது ஓவரில் அக்சர் படேல் என வரிசையாக மட்டையாளர்கள் ஆட்டமிழந்தனர். பின்னால் வந்த மட்டையாளர்கள் எவரும் ஒற்றை இலக்க ஸ்கோரைத் தாண்டவில்லை. இதனால் இந்திய அணி 11.4 ஓவர்களில் 76 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது,

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.