வாக்களிப்பு இயந்திரக் கோளாறால் சில இடங்களில் வாக்குவாதம்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
sivagiri pollingbooth - 2026
மின்னணு இயந்திரக் கோளாறு ஏற்பட்ட சிவகிரி பசும்பொன் தேவர் தொடக்கப்பள்ளி பூத்.

மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகளால் சில இடங்களில் வாக்களிப்பில் தாமதமும், வாக்குவாதமும் ஏற்பட்டது.

சிவகிரி வாக்குச்சாவடி எண் 22 இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. 1 மணி நேர தாமதத்துக்குப் பின்னர் புதிய இயந்திரம் வரவழைக்கப்பட்டு, வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இந்த பூத்தில் மொத்தம் 675 வாக்காளர்கள் உள்ளனர்.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

குடவாசல் தாலுக்கா மூலங்குடி வாக்குச்சாவடி மையம் மற்றும் குடவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையம் ஆகிய இரண்டு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வேறு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. உள்ளூர் கோவில் பிரச்சனையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ,பதற்றமான வாக்குச்சாவடி என, கண்டறியப்பட்டுள்ள வண்டாம்பாளை வாக்குச்சாவடி மையத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் இருளப்பபுரம் உள்ளிட்ட 40 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு 1 மணி நேரம் வரை வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.