மக்கள் ஜனநாயகக் கடமையை சிறப்புடன் செய்கின்றனர்: மணிசங்கர் ஐயர்!

Published:

manisankariyer - 2026

மயிலாடுதுறையில் மணிசங்கரய்யர் தனது  வாக்கைச் செலுத்தினார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை டி.யி.எல்.சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அமைதியான முறையிலும் ஆர்வத்துடன் மக்கள் வந்து வாக்களிக்கின்றனர் என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறினார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சயின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர்அய்யர் தனது மயிலாடுதுறை டிஎல்சி பள்ளி வாக்கு சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மக்களவைத் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆர்வத்துடன் மக்கள் வந்து வாக்களிக்கின்றனர்.

இந்தத் தொகுதியில் யார் ஜெயிப்பார் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்! ஜனநாயகக் கடமையை மயிலாடுதுறை மக்கள் சிறப்பாக நிறைவேற்றுகின்றனர் என்று தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img