புது தில்லி: ரபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் மோடியை கண்மூடித் தனமாகக் குறை கூறி வரும் ராகுல், பாகிஸ்தானின் குரலை பேசி வருகிறார். பாகிஸ்தானுடன் ரகசியக் கூட்டு வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா.
ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் தொடங்கப் பட்டது. அப்போதே ரிலையன்ஸ் இந்த ஒப்பந்தத்தில் இழுக்கப் பட்டு விட்டது. இதனை கடந்த 2013 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகி தகவல் தெரிவித்தன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, மோடி அரசே ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வர காரணம் என்று கூறி கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.
பாஜக., வும் ஆளும் அரசும் ராகுல் குற்றச்சாட்டுக்கான விளக்கங்களையும் ஆதாரங்களையும் அளித்து வருகின்றன. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ராகுல் வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி வருகிறார்.
இந்நிலையில் பாஜக, தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ராகுல் குரல் எழுப்புகிறார். பாகிஸ்தானும் இதனையே கூறி வருகிறது. மோடிக்கு எதிரான ராகுலின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. இதனால் மோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் ராகுல் சர்வதேச மெகா கூட்டணி அமைத்துள்ளரா ? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Rahul Gandhi says ‘Modi Hatao’
Pakistan says ‘Modi Hatao’Now Pakistan also supports Rahul Gandhi’s baseless allegations against PM Modi.
Is Congress forming an International Mahagathbandhan against PM Modi?#NaPakNaCongresshttps://t.co/eHBs0DGfBP
— Amit Shah (@AmitShah) September 22, 2018




