மோடி, அமித்ஷா- ‘ராம லட்சுமணர்கள்’: இல.கணேசன்!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
amitsha lg - 2026

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராமலட்சுமணர்களைப் போன்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் பாஜக., மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்.

இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 55வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களில் அமித் ஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அரசியலில் சாணக்கியரான அமித் ஷா மற்ற மாநிலங்களில் பாஜக.,வை உச்சத்தில் கொண்டு வைத்ததைப் போல், தமிழகத்திலும் பாஜக.,வை நிலை நிறுத்த ஒரு கை பார்ப்பார் என்று தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மோடி, அமித் ஷா இருவரும் ராம லட்சுமணர்களைப் போல் இரட்டையர்கள் என்று குறிப்பிட்டு டிவிட்டர் பதிவில் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இல.கணேசன். அவரது டிவிட்டர் பதிவில்…

ஸ்ரீராம லட்சுமணர்களைப் போல நரேந்திர மோதியும், அமித் ஷாவும் இணை பிரியா இரட்டையர்கள். அவர்களது அவதாரத்திற்கு நோக்கம் உண்டு. அது நிறைவேறிட நம்மாலான வகையில் ஒத்துழைப்போம். ஆண்டவன் அருள் புரியட்டும். இன்று பிறந்தநாள் காணும் @AmitShah அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! #HBDayAmitShah

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.