திருவாரூர்: பாஜக., தன்னை பின்னிருந்து இயக்குவது, ரஜினியின் தொடர்பு இவை குறித்து மு.க. அழகிரி பதில் அளித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
மேலும், கருணாநிதியின் கொள்கைகளை என்றும் நான் பின்பற்றுவேன் என்று கூறிய மு.க. அழகிரி, பாஜக., என்னை இயக்குவதாகக் கூறுவது தவறு என்றார்.
ரஜினியுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது வதந்தி என்று கூறிய அழகிரி, தனிக் கட்சி துவக்கும் திட்டம் இல்லை என்றார்.
தமிழகத்தில் தற்போது அரசியல் நடக்கவில்லை; போராட்டம்தான் நடக்கிறது. விசுவாசிகள் கேட்டுக் கொண்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார் மு.க.அழகிரி!




