சென்னை: நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, “ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
கருணாஸை கைது செய்த காவல்துறை,பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வீ.சேகர் – உயர் நீதிமன்றத்தையே விமர்சித்த எச்.ராஜா ஆகியோரை இன்னும் கைது செய்யாதது ஏன்? – என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஓர் அறிக்கையில், கைது செய்ய வேண்டியவர்களின் பின்னணி பற்றி கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும். கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? தமிழகத்தில் சட்டம், “ஆளுக்கொரு நீதி – வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில் தான் அமல்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, "ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்" என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
கருணாஸை கைது செய்த காவல்துறை,பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வீ.சேகர் – உயர்நீதிமன்றத்தையே விமர்சித்த எச்.ராஜா ஆகியோரை இன்னும் கைது செய்யாதது ஏன்?
— M.K.Stalin (@mkstalin) September 23, 2018




