சென்னை : முதல்வர் மற்றும் காவல் துறையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் இன்று காலை கைது செய்யப் பட்டார்.
காலை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட கருணாஸிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை அக்.5 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பின்னர் கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.




