ஸ்டெர்லைட் ஆலையில் 3 பேர் குழு ஆய்வு செய்தது.
ஸ்டெர்லைட் ஆலையில் தில்லியில் இருந்து வந்த தரூண் அகர்வாலா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனையொட்டி ஆலை சுற்றுப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு நடத்தப் படுகிறது.
நேற்று ஆலை அருகே கழிவுகள் கொட்டப்படும பகுதியில் இந்தக் குழு ஆய்வு நடத்தியது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வின்போது உடன் சென்றிருந்தார்.
ஆய்வுக் குழுவினரிடம் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
எனவே மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்பட பலர் தங்களின் தரப்பு கருத்தை தெரிவித்திருந்தனர்.




