கருணாஸ் மீது வழக்குப் பதிந்ததை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில், கருணாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில், கடந்த 16ஆம் தேதி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சரையும், காவல்துறை அதிகாரியையும், கருணாஸ் அவதூறாக பேசினார்.
இந்த விவகாரத்தில், கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் மீது 6 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து, வெள்ளிக் கிழமையன்று, சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இது தொடர்பாக, விருகம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், 409ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் ஒட்டிய போஸ்டர்கள் என்பதன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.




