நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்: எச் ராஜா

Published:

hraja - 2026

நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்..என்று எச் ராஜா  செய்தியாளர்களிடம் பேசியபோது நம்பிக்கை தெரிவித்தார்

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, இன்று காலை காரைக்குடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது “கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெறும்.

மீண்டும் நரேந்திர மோடி ஆட்சி புரிவார்.

இந்த தேர்தல் ஜனநாயக தேர்தல் ஜனநாயகம் வெல்லும்.

மீண்டும் பாஜக ஆட்சி புரியும்” என்று சொல்லி விட்டு சென்றார்.

Related articles

Recent articles

spot_img