thiruvilakku vazhipadu at sengottai - 2026

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

ஆன்மிகச் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல்
thiruvilakku vazhipadu at sengottai - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னா் உத்ரா பொதிகை திருவாசக பாராயண அடியார்கள் கூட்டமைப்பு சார்பில் திருவாசகி சிவபகவதி தலைமையில் குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் மற்றும் சிறப்பு அன்னதானம் நடந்தது.

மாலை 6 மணிக்கு முத்ரா நடனாலயா குழுவின் பயிற்சி ஆசிரியா் விசாலம் ஏற்பாட்டில் பயிற்சி மாணவியா்களின் பரதநாட்டியம் நடந்தது. பின்னா் உலக நன்மை வேண்டி மாபெரும் திருவிளக்கு வழிபாட்டில் முதல் திருவிளக்கினை முத்துலெட்சுமி, ஏற்றி துவக்கிவைத்தார்.

திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியை ஸ்ரீதேவி, புனிதா, பழனியம்மாள் பேச்சியம்மாள், போட்டோகிரியேட்டர்தேவி, உஷா அருணாராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி ஆகியோர் நடந்தினா். பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் இராம்நாத், ஆடிட்டர்சங்கர், கோபாலகிருஷ்ணன், சண்முகம், குருவூர்கண்ணன், வீரபுத்திரன், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா். திருவிளக்கு வழிபாட்டில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.