railway news - 2026

செங்கோட்டை ஈரோடு ரயில் மார்க்கத்தில் மீண்டும் மாற்றம்!

சற்றுமுன் கோவை நெல்லை பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

இனி நேர் வழியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட சில நாட்களில் செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் மீண்டும் 6 நாட்களுக்கு நாளை அக்6முதல் மாற்று வழித்தடத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வழித்தடத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது குறித்து பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவிவருகிறது.

​செங்கோட்டையிலிருந்து ஈரோடு வரை இயங்கும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையில், புகளூர் – மூர்த்திபாளையம் இடையே நடைபெறும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

​பாதிக்கப்படும் ரயில்:
ரயில் எண்: 16846 செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் காலை 05.20 மணிக்கு செங்கோட்டை ரயில் புறப்படுவது

​
இந்த ரயில் வரவிருக்கும் அக்டோபர் மாத தேதிகளில் கரூர் சந்திப்பு வரை (Karur Jn) மட்டுமே இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை இந்த ரயில் பகுதி ரத்து செய்யப்படுகிறது.

​எந்தெந்த தேதிகளில்?
அக்டோபர் 2026-ல் வரவிருக்கும் கீழ்க்கண்ட தேதிகளில் (செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்) இந்த மாற்றம் அமலில் இருக்கும்:
​அக்டோபர் 6, 8, 10, 13, 15 மற்றும் 17.

பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், பயணிகளின் வசதிக்காக கரூர் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பிற்கு ஒரு முன்பதிவில்லா சிறப்பு ரயில் (Unreserved Special Train) இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் வழக்கமாக நிற்கும் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். ஈரோடு வரை செல்ல வேண்டிய பயணிகள் இந்தச் சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.