hrnce commissioner office chennai - 2026

கோயில் விவகாரத்தில் தமிழக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

அரசியல் இந்தியா சற்றுமுன்
hrnce commissioner office chennai - 2026

இந்து அறநிலையதுறை சொத்தின் பாதுகாவலர் மட்டுமே, உரிமையாளர் அல்ல.. என தமிழக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் வெளியிட்ட அறிக்கை:

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு, அதன்படி தமிழர்களின் வாழ்க்கை கோயிலை மையமாக வைத்தே இயங்கியது.

எனவே கோவில் தொடர்ந்து சுமூகமாக இயங்க பொருளாதாரம் அவசியம், கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் முக்கியம் அதன்படி பக்தர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்கு லட்சக்கணக்கான நிலங்கள் கட்டிடங்களை கொடையளித்தார்கள்.

அந்த நிலங்களில் இருந்து வரும் வருவாயை கொண்டு அன்றாட திருக்கோயில் பூஜை சடங்குகள் முதல் விழாக்கள், கோவிலில் சேவை செய்வோர் வாழ்வாதாரம் வரை சீராக இயங்கியது.

இது தவிர தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என ஏராளமான பெருமதிப்பு மிக்க ஆபரணங்களும் பூஜை பொருட்களும் திருக்கோவில் நன்கொடையாக அளித்து மகிழ்ந்தனர்.

ஆங்கிலேய கிறிஸ்தவ ஆட்சியில் கோவில் சொத்துகள் அவர்களின் கண்ணை உறுத்தின. கோவிலுக்கு வரி போடவும் வருவாயை திருடவும் அறக்கொடை சட்டம் கொண்டு வந்தார்கள், கோவில் சொத்துகளை அபகரித்து மிஷனரிகளுக்கு தாரை வார்த்தார்கள்.

சுதந்திரம் பெற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1951 இயற்றபட்டது. இந்த சட்டத்தின் படியும் கூட இந்து சமய அறநிலையத்துறை கோவிலின் நிர்வாகி அல்ல, கோவில் சொத்துகளின் உடைமையாளர் அல்ல, வெறுமனே மேற்பார்வையாளர் & பாதுகாவலர் மட்டுமே.

ஆனால் திரவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு எங்கும் ஊழல் எதிலும் ஊழல் எல்லா துறையிலும் ஊழல் என்ற கொள்(ளை)கை இந்து சமய அறநிலையத்துறையிலும் புகுத்தபட்டு கோவில் சொத்துகள் கொள்ளையடிப்பதற்கு நிர்வாகம் என பெயரிடபட்டுவிட்டது.

வேலியே பயிரை மேய்வதற்கு சான்றாக கோவில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய மாநில அரசே, கோவில் சொத்துகளை அபகரித்து அரசு அலுவலகம் கட்டுவது, பேருந்து நிலையம் அமைப்பது, கலெக்டர் அலுவலகம் என பலவாறாக கோவில் சொத்துகளை சூறையாடியது.

அவ்வாறாக ஈரோடு மாவட்டம், நாகபாளையம் மாரியம்மன் – பொன்னாச்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தை தற்காலிக அறங்காவலரை நியமித்து மாவட்ட ஆட்சியர் மூலமாக வட்டாட்சியருக்கு தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து அந்த இடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டியது மாநில அரசு. பாதுகாவலாக இருக்க வேண்டிய மாநில அரசே கோவில் சொத்தை முறைகேடாக அபகரித்து கொண்டுள்ளது.

இது கோயிலின் நலனுக்கு என, தங்கள் சொத்துக்களை தானம் செய்தவர்களுக்கு, அரசு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும்.

அந்த கோயிலின் பரம்பரை அறங்காவலர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவிலின் நலனுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறையே வாதிட்டு வழக்கு தள்ளுபடி ஆகி உள்ளதை உச்ச நீதிமன்றம் சுட்டிகாட்டியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக கோவில் பணத்தில் கோவிலுக்கு எதிராக வழக்கு நடத்தியதையும் இங்கே நினைவு கூறவேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம் கோவில் சொத்து கோவிலுக்கே என்றும், இனாம் சொத்துகள் கோவிலுக்கே சொந்தம் என்றும், தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் பாதுகாவலர்கள் மட்டுமே என்றும், எனவே மாநில அரசே தன் அதிகாரிகள் மூலமாக கோவில் சொத்தை அபகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சம்மட்டியால் அடித்துள்ளது.

தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் இனியாவது திருந்த வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு தலைவணங்க வேண்டும்.

திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதுடன், அரசு ஆக்கிரமித்துள்ள சொத்துகளையும் திருக்கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும்.

ஏற்கனவே ஏராளமான கோவில் சொத்துகளை ஆக்கிரமித்துதான் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே மாநில அரசும் இந்து சமய அறநிலையதுறையும் மாநில அரசு கைப்பற்றி அனுபவித்துவரும் கோவில் சொத்துகளை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் கரூர் மாவட்ட கோவிலுக்கு சொந்தமான இனாம் நிலங்களும் அந்தந்த கோவிலுக்கே சொந்தம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே 3000 ஏக்கர் நிலங்கள் பத்திரபதிவு செய்ய தடை நீக்கம் செய்த உத்தரவை தவெக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது.