
வீட்டு வசதி வாரியத்திற்கு நில எடுப்புக்கான பணத்தை முழமையாக ஒப்படைக்காத மாவட்ட நிர்வாகம் – மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்!
மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த கருப்பையா- மீனாட்சியம்மாள் தம்பதி என்பவருடைய 2 ஏக்கர் 14 சென்ட் நிலத்தை 1973ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைக்க அன்றைய மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் 19ஆயிரத்தி 688 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வாங்கப்பட்ட நிலத்திற்கான தொகை போதாது என கருப்பையா நீதிமன்றத்தை நாடி 1982 ஆம் ஆண்டு சென்டு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு ஏக்கர் 14 சென்ட் நிலத்தை 2லட்சத்தி 14ஆயிரம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதில், குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு தொகையை முழுமையாக செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி மாவட்ட நிர்வாகத்தினுடைய ஆட்சியர் காரை, பறிமுதல் செய்தனர்.
ஒரு லட்ச ரூபாய் தொடர்ந்து பணத்தை ஒப்படைப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்து பாண்ட் எழுதிக் கொடுத்து காரை எடுத்துச் சென்றனர். 2010 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேல்முறையீடு செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பணத்தை தொடர்ச்சியாக தராமல் காலம் தாழ்த்தி வந்தனர் வாகனத்தை ஒப்படைக்க கோரி நீதிமன்றத்தை அணுகிய போது கடந்த மாதம் ஜனவரி21 தேதி பிணை முறிவு பத்திரம் ரத்து செய்து வாகனத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ச்சியாக வாகனத்தை ஒப்படைக்காமல் இருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் காரை நீதிமன்ற மீனா மற்றும் வாரிசுதாரர்கள் முன்னிலையில் வழக்கறிஞர் ஆர் செல்வராஜ் மற்றும் வாரிசுதாரர்கள் ஆட்சியில் காரை பறிமுதல் செய்ய காத்திருக்கின்றனர்.