ரிலீசுக்கு தயாராகியுள்ள விஸ்வரூபம் 2: கமல்-விஷால் சந்திப்பின் பின்னணி என்ன?

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

kamalvishal - 2026

‘தூங்கவனம்’ படத்திற்கு பின்னர் கமல்ஹாசனின் நடித்த படம் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியாகவில்லை. அதனால் தான் அவர் வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வந்ததாக கூட கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் ஒருவழியாக நீண்ட காலமாக தாமதமாகியிருந்த ‘விஸ்வரூபம் 2’ படத்தை முடித்து நேற்று சென்சார் சான்றிதழும் பெற்றுவிட்டார். ஆனால் உடனே ரிலீஸ் செய்ய முடியாத வகையில் திரையுலகினர்களின் ஸ்டிரைக் குறுக்கே உள்ளது.

இந்த நிலையில் தனது படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இன்று விஷாலுடன் கமல் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.