write thoughts - 2026

ஆட்சி மாற்றம்; பழம் பெருமையை மீட்டு வரும் மேற்கு வங்கம்!

சற்றுமுன் அரசியல் உரத்த சிந்தனை கட்டுரைகள்
write thoughts - 2026
#image_title
  • ஆர்.கே.

மேற்கு வங்கத்தில் புதிய அரசு அரியணை ஏறியதும் உறங்கி கிடந்த மக்கள் முன்னேற்ற திட்டங்கள் பலவும் தூசு தட்டப்பட்டு படு வேகமாக செயல்பாட்டுக்கு வருகிற நிலையில் இருப்பது மேற்கு வங்க மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியே !

பழம்பெருமை வாய்ந்த மெட்ரோ நகரமான கொல்கத்தா தவிர பிற முக்கிய நகரங்களுக்குப் புத்தம் புதிய தோற்றத்தை அளிப்பதற்காக, தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்துடன் (NBCC) ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது மேற்கு வங்க அரசு. .

ஹூக்ளி நதியின் இரு கரைகளிலும் ஆற்றங்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு, உலக வரைபடத்தில் பிரதானமான இடத்தைப் பெற்றுருக்கும் இவ்வாற்றங்கரைப் பகுதியை ஒரு உலகத் தரம் வாய்ந்த இடமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில், சந்தன்நகரில் உள்ள திட்டமும் அடங்கும். இந்த MAKEOVER மூலம், சந்தன்நகர் கொண்டிருக்கும் பிரெஞ்சு கால கலாச்சார பின்னணி பகுதி ஒரு புதிய வாழ்க்கையைப் பெற உள்ளது.

சந்தன்நகரின் பழம்பெருமை மிகு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தை பாதுகாத்து அதை சுற்றுலா பாதுகாப்பு சொத்தாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. ஒரு காலத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நீதிமன்றத்தை கொண்டிருந்த பிரெஞ்சு கால கட்டமைப்பான Registry கட்டிடத்தின் மறுசீரமைப்பு பணிகள் செப்டம்பர் மாதம் முறையாக தொடங்கப்பட்டது. இந்த முயற்சியானது மூன்று நாள் கொண்டாட்டமான சந்தன்நகர் திருவிழாவுடன் அப்போது தொடங்கப்பட்டது. .

தற்போதைய சந்தன்நகர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள இந்தப் பழைய ரெஜிஸ்ட்ரி கட்டிடம் பல வருடங்களாக பாழடைந்த நிலையில் காணப்பட்டது. பிரஞ்சு காலனித்துவ கட்டிடக்கலையின் தனித்துவமான .தொகுப்புகளில் ஒன்று இந்த ரெஜிஸ்ட்ரி கட்டிடம். குடும்பங்கள், பார்வையாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள அழகான இடங்களை பாரம்பரிய நோக்குடன் இனி எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தாவின் புகழ்பெற்ற புத்தக மையமான காலேஜ் ஸ்ட்ரீட்டை மறுவடிவமைப்பு செய்வதும் இந்தத் திட்டத்தில் அடங்கும். இது இந்த ஒப்பந்தங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் முதல் திட்டமாகும். காலேஜ் தெருவின் வரலாற்றுச் சிறப்பைத் தக்கவைத்துக் கொள்வதோடு, அதனைத் தூய்மையாகவும், மேலும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்கும் விதமாகவும் மாற்றுவதே இதன் இலக்காகும்.

இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் கலாச்சார பின்னணி கொண்ட கல்கத்தா போன்ற நகரங்களின் பழமைப் பெருமையை மீட்டு எடுக்கும் முதல் படியாகும், மேலும் பணிகள் நிறைவடைய சில காலம் எடுக்கலாம். .

மேற்கு வங்க மக்கள் கொண்டிருக்கும் பாரம்பரியம், கலை இலக்கிய நாட்டம் மற்றும் ஆற்றங்கரைகள் மீது அவர்கள் காட்டிவரும் அக்கறையைக் காண்பது பாரதத்தில் வாழ்ந்து வருவோர் அனைவருக்கும் பெருமைதானே. உலகம் முழுக்க தினசரி ஒலிக்கும் தேசபக்தி காணங்களான வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் ஆகிய வார்ப்புகள் மேற்கு வங்கத்தின் கொடைதானே .

Posts by தினசரி செய்திகள்: