மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் காலமானார்: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

சற்றுமுன் தமிழகம்

natarajan2 - 2026

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானார்.

மரணம் அடைந்த நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 11 மணி வரை வைக்கப்படும் என்றும் பின்னர் அவரது சொந்த ஊரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

நடராஜன் காலமானாதை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு உடனடியாக பரோல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பரோல் கிடைத்தால் இன்று மாலை அவர் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.