தமிழக பயணம் முடிந்து திருவனந்தபுரத்தை நோக்கி செல்லும் ராம்ராஜ்ய ரதம்

சற்றுமுன் தமிழகம்

rath yatra 1 - 2026கடந்த பிப்ரவரி மாதம் உத்தரபிரதேசத்தில் அம்மாநில முதல்வராக தொடங்கி வைக்கப்பட்ட ராமராஜ்ய ரதம் மகாராஷ்டிரா, கர்நாடகா , கேரளா உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக பயணம் செய்து சமீபத்தில் தமிழகத்திற்குள் வந்தது.

இந்த ரதம் வருகையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும், மதக்கலவரம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் திராவிட போராளீஸ்களும், லெட்டர்பேட் கட்சிகளும் போராட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றின. ஆனால் இந்த போராட்டம் பிசுபிசுத்து போய், எந்தவித பிரச்சனையும் இன்றி பொதுமக்களின் ஒத்துழைப்பால் இந்த ரதயாத்திரை தமிழக பயணத்தை முடித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, நாகர்கோவிலிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் புறப்பட்டது ஸ்ரீராமதாச மிஷன் ரதம். தமிழக எல்லையில் ஆயிரக்கணக்கானோர் இந்த ரதத்தை வழியனுப்பி வைத்தனர். இந்த ரதயாத்திரை மூலம் பெரும்பாலான இந்துமத மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்துள்ளனார். இந்து மதத்திற்கு எதிரான அரசியல் தலைவர்கள் யார் யார்? அரசியல் கட்சிகள் என்னென்ன? என்பது புரிய வந்துள்ளது. இதன் தாக்கம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.