புதுதில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகாரின் பேரில், அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தில்லியில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அரவிந்த் கேஜரிவால், “தலைநகரில் உள்ள தனியார் மின் விநியோக நிறுவனங்களுடன் தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய், பொதுச் செயலர் ஆசீஷ் சூட் ஆகியோர் கூட்டு வைத்துள்ளனர்; பல்வேறு தனியார் நிறுவனங்களில் அவர்கள் ஏராளமான பங்குகளை வைத்துக் கொண்டு மத்திய அரசில் காரியம் சாதித்து வருகின்றனர்’ என்று குற்றம்சாட்டினார். அத்துடன், பாஜக மதவன்முறையைத் தூண்டுவதாகவும் கேஜரிவால் புகார் கூறியிருந்தார். இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தில் சதீஷ் உபாத்யாய் வியாழக்கிழமை புகார் தெரிவித்திருந்தார். இதைப் பரிசீலித்த தலைமைத் தேர்தல் ஆணையம், அரவிந்த் கேஜரிவாலுக்கு சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதில்… “சதீஷ் உபாத்யாய் அளித்துள்ள புகாரில் அவர் மீதும், ஆசீஷ் சூட் மீதும் தனிப்பட்ட முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார். எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களையோ, அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களையோ ஆதாரமின்றி விமர்சிக்கக் கூடாது. மேலும், உங்கள் பேட்டியின் போது திரிலோக்புரி, நந்த்நகரி பகுகளில் சதீஷ் உபாத்யாய் வன்முறையைத் தூண்டியதாகவும் நாங்க்லோய், பவானாவில் அதேபோன்ற வன்முறையை அவர் தூண்ட முயல்வதாகவும் கூறியுள்ளீர்கள். தில்லியில் தேவாலாயம் தாக்கப்பட்ட சம்பவத்திலும் சதீஷ் உபாத்யாய்க்கு தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இவை அனைத்தும் சமூகத்தில் வகுப்புவாதத்தையும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது வெறுப்புணர்வையும் தூண்டும் வகையிலான செயல்பாடுகளாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே, உங்கள் செயல்பாடு தொடர்பாக வரும் 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள்ளாக தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கருதி உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகார்: நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari