தல அஜித்துக்கு பெருமை சேர்க்கும் பில்லா பாண்டி’ பட பாடல்

சற்றுமுன்

billpandi - 2026தல அஜித் பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் ‘பில்லா பாண்டி’ என்ற படத்தில் இடம்பெற்ற எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் ” என்ற பாடல் வெளியாகவுள்ளது

இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா தனது டுவிட்டரில் வெளியிடவுள்ளார். ஆர்.கே.சுரேஷ் தல ரசிகராக நடித்திருக்கும் இந்த படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் தல அஜித்தின் பெருமையை குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாம்

ராஜ்சேதுபதி இயக்கத்தில் இளையவன் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், தல ரசிகர் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.