இணையத்தில் கசிந்த விஜய் 62′ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

சினி நியூஸ் சினிமா
thalapathii62 - 2026பிரபல இயக்குனர் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கடந்த சில நாட்களாக முக்கிய காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சுமார் 100 கல்லூரி மாணவர்களுடன், விஜய் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
சென்னையை இருசக்கர மோட்டார் சைக்கிளில் விஜய் வலம் வரும் இந்த காட்சியை மூன்று கேமிராக்கள் மூலம் படக்குழுவினர் படமாக்கினர்.  இந்த நிலையில் இந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த விஜய் ரசிகர் ஒருவர் படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் திரைக்கு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.