இனி சட்ட நடவடிக்கைதான்: ஊடகங்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

nivetha pethuraj1 - 2026கடந்த சில நாட்களாக நடிகை நிவேதா பேத்ராஜினி பிகினி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் ஒருசில இணையதளங்களிலும் மிக வேகமாக பரவி வந்தது. ஆனால் பிகினி உடையில் உள்ள அந்த நடிகை நிவேதா இல்லை என்றும் அவர் ஒரு பாலிவுட் மாடல் என்றும் நிவேதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஒருசில ஊடகங்கள் நிவேதா பேத்ராஜ் என்றே செய்தி வெளியிட்டன,. இதனால் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் நிவேதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளி இட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இதன் தொடர்பாக நான் சட்ட ஆலோசனை செய்து தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்.ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன்.ஆயினும் இந்த பிரச்சினை தொடருகிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது.இந்த கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு, என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்றுக கொள்வதை தவிர வேறு வழி இல்லை”

இவ்வாறு நிவேதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.