andava - 2026விஷாலின் அண்ணன் மனைவி ஸ்ரேயா ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்து வந்த ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் கூறியுள்ளார்.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சதீஷ்குமார் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் டிஷ்யூ பேப்பருடன் வரவேண்டிய அவசியமில்லை. குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு ‘யூ’ சான்றிதழ் படம். ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இதில் இல்லை. குறிப்பாக படம் முடிந்தவுடன் தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியமும் இருக்காது. ஒரு நல்ல படத்திர்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தினை மறைமுகமாக தாக்கும் வகையில் அவர் தனது டுவிட்டரில் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending