கனவின் விளைவு: பூச்சிகளைக் கண்டால்…!

Published:

insects - 2026

எட்டுகால் பூச்சி கனவில் வந்தால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பொருள்.

சிலந்தியை கனவில் காண்பது பொருள் வரவுக்கு வழிவகுக்கும்.

சிலந்தி கூட்டை அழிப்பது போல கனவு வந்தால் நல்லதல்ல. அது குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கனவு பலன்கள் சிலந்தி

கரப்பான்பூச்சியை கனவில் கண்டால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.

அந்து பூச்சியை கனவில் கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று அர்த்தம்.

அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும்.

ஈக்கள்ஈக்கள் நம்மை சுற்றி சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும் என்று பொருள்.
கனவு பலன்கள் ஈ

ஈக்கள் மொய்ப்பது போல கனவு வந்தால் வியாதிகள் வரும் என்று பொருள்.

தேனீக்கள் :

தேனீக்கள் தேன் கொண்டு வந்தாலும், கூட்டை கட்டுவது போல கனவு கண்டாலும் நல்லது நடக்கும்.

தேனீக்கள் கனவில் வந்தால், வாகனப் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவு வந்தால் நாம் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

பட்டாம்பூச்சிபட்டாம்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

பட்டாம்பூச்சிபட்டாம்பூச்சி கூட்டமாக வீட்டை விட்டு வெளியே சென்றால் பண பற்றாக்குறை ஏற்படும்.

வெட்டுக்கிளி கனவில் வந்தால் பார்க்கும் வேலையில் பாதிப்பு ஏற்படும்.

பச்சை வெட்டுக்கிளியை கனவில் வயலில் காண்பது மிகவும் நல்லது.

கனவில் எதிரிகளைக் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமாம்.

கனவில் வாடிப்போன பூக்களைக் கண்டால், வியாதி உண்டாகும். எனவே வருமுன் காப்பது நினைவுப் படுத்திக்கொள்ளவேண்டும்.

இஞ்சி கனவில் வந்தால், நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.

கனவு காண்பவர் வாய்விட்டு சத்தமிட்டு அழுவது போல் கனவுக் கண்டால் அவரது வாழ்க்கையில் சில இடையூறுகள் ஏற்படும்.

சீப்பு கனவில் வந்தால் வாழ்வில் சிக்கல்கள் உண்டாகும் என்னும் அர்த்தத்தைக் குறிக்கும்.

இடியுடன் கூடிய மழை பொழிவதை கனவில் பார்த்தால், உறவினர் விரோதிகளாக மாற நேரிடும்.

வித்தியாசமான மனிதர் அல்லது வித்தியாசமான பொருட்கள் கனவில் வந்தால், புதியவரை நம்ப வேண்டாம் என்னும் எச்சரிக்கையாம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குழந்தைகள் இறப்பது போல் கனவு வந்தால் அவருக்கு வர இருக்கும் பேராபத்தைக் குறிக்கும் எச்சரிக்கை.

இரும்பை எடுப்பது போல் கனவுக் கண்டால் மிகவும் கெடுதலான சம்பவத்தை நடப்பதைக் குறிக்கும்.

கீழே விழுவது போல கனவு கண்டால், பொருள் நஷ்டமடைய நேரிடும்.

கனவில் பசுவை விரட்டுவது போல் கண்டால் வியாதி உண்டாகும்.

கனவில் தேனீக்கள் கொட்டுவது போல் வந்தால் வீண் செலவுகள் உண்டாகும் என்பது அர்த்தம்.

நீங்கள் தனித்து உண்பதுபோல் கனவு வந்தால் தொழிலில் நஷ்டம் உண்டாகும்.

கனவில் காக்கை வந்தால், தொழிலில் அல்லது உத்தியோகத்தில் பாதிப்பு உண்டாகும்.

கனவில் பூனையை வந்தால் திடீர் நட்டம் ஏற்படும்.

எறும்புகளை கனவில் கண்டால் மனக் கஷ்டம்.

கனவில் தேரோட்டம், திருவிழாக்களைக் கண்டால், உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் வரலாம் என்னும் எச்சரிக்கையை உணர்த்தும்.

Related articles

Recent articles

spot_img